
நிஜ போலீஸ்காரர் எழுதும் கதையில் போலீஸாக நடிக்கும் காமெடி நடிகர்
70 வயது கிழவராக இவர் நடித்த "ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்" மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த "டிரைவிங் லைசென்ஸ்" என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் காமெடி நடிகராக பல வருடங்களை வீணடித்து விட்டாரே என்றுதான் கூறினார்கள். இந்தநிலையில் தற்போது .புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதையை தற்போது கேரளாவின் அரூர் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்ரமணியன் என்பவர் தான் எழுதியுள்ளார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை அவர் எழுதியுள்ளாராம். இவரது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான் சுராஜ் நடிக்க இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!