
தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா
தெலுங்கில் இளம் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற நடிகரான விஜய் தேவரகொன்டா அவரது செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த வீடியோ ஒன்றை நேற்று பதிவிட்டுள்ளார். விஜய், அவரது தம்பி ஆனந்த், நாய் ஸ்டார்ம் ஆகியோர் விமானத்தில் பயணித்த போடு எடுத்த அந்த வீடியோவில் விஜய்யுடன் ஸ்டார்ம் கை குலுக்குவதும், ஹை-பை சொல்வதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “இந்த ஜென்டில்மேனின் முதல் விமானப் பயணம்" என விஜய் குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சங்கராந்தி தினத்தன்று கூட “எனது அன்பாவனவர்கள், ஹேப்பி ஹேப்பி ஹேப்பி சங்கராந்தி” என்று அவர் பதிவிட்டு வெளியிட்ட குடும்பப் புகைப்படப் போட்டோவில் நாய் ஸ்டார்ம் கூட இடம் பெற்றுள்ளது. தன் செல்ல நாயை தன் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார் விஜய் தேவரகொன்டா.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!