
அல்போன்ஸ் புத்ரனுக்கு வெங்கட்பிரபு - யுவன் கொடுத்த உற்சாக டானிக்
அவர் கூறும்போது, “மன்மதன் படத்தில் நடித்தது போன்ற சிம்புவை மீண்டும் இதில் பார்க்க முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும் கூட அவரது டைரக்ஷனில் நடிப்பது போன்றே ரிலாக்ஸாக நடித்திருந்தார். தவிர வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது..
சரோஜா படத்தில் இடம்பெற்ற "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்கிற பாடல், நான் பலமுறை சோர்ந்துபோய் அமர்ந்த நேரத்திலெல்லாம் எனக்கு உற்சாகம் அளித்து, ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உதவியது. இந்தப் பாடலை உருவாக்கிய உங்கள் இருவருக்கும் நான் என்ன திருப்பி செய்யப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!