
ஒரே கலரில் உடையணிந்து வந்த காவ்யா மாதவனும் மஞ்சு வாரியர் மகளும்
அதேசமயம் திலீப்-மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகளான மீனாட்சி, பெற்றோரின் விவாகரத்துக்கு முன்னரே தாயை விட்டு பிரிந்து திலீப்புடன் வசித்துவந்தார். மகளின் ஒப்புதலுடன் தான் காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார் திலீப். சொல்லப்போனால் பெற்ற தாயான மஞ்சு வாரியரை விட, தனது சிற்றன்னையான காவ்யா மாதவனிடம் தான் மீனாட்சி அதிக ஒட்டுதலுடன் பிரியமாக இருந்து வருகிறார்..
இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு காவ்யா மாதவனும் மீனாட்சியும் ஒரே நிறத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான டிசைனில் உடையானிந்து வந்து ஆச்சர்யப்படுத்தினார். விழாவுக்கு வந்த பலரும் இவர்கள் இருவருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!