
ஓடிடியில் ப்ரோ டாடி, தியேட்டர்களில் ஆராட்டு
லூசிபர் படத்தை தொடர்ந்து பிரத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் இரண்டாவது முறையாக நடித்துள்ள இந்த ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் ஜன-26ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம் தனது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்-10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ரோ டாடி காமெடி படமாகவும் ஆராட்டு ஆக்சன் படமாகவும் உருவாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!