
24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த ராதே ஷ்யாம் டிரைலர்
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படத்துள்ளது. இதன் மூலம் "பாகுபலி 2" டிரைலர் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.
அந்த சாதனையை "ஆர்ஆர்ஆர்" டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் "ராதே ஷ்யாம்" டிரைலர் முறியடித்துள்ளது. இதன் மூலம் பிரபாஸுக்கான பான்-இந்தியா இமேஜ் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தெலுங்கு டிரைலரை விட ஹிந்தி டிரைலர் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது ஹிந்தி டிரைலர் 38 மில்லியன் பார்வைகள், தெலுங்கு டிரைலர் 31, தமிழ் டிரைலர் 5, கன்னட டிரைலர் 2, மலையாள டிரைலர் 3 மில்லியன் பார்வைகைளப் பெற்று மொத்தமாக 80 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. "ராதே ஷ்யாம்" 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!