
பத்தே நாட்களில் படத்தை முடித்த மம்முட்டியின் ஆஸ்தான இயக்குனர்
மலையாளத்தில் ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ், ஷைலாக் என மம்முட்டி நடித்த படங்களையே தொடர்ந்து இயக்கிவந்த அவரது ஆஸ்தான இயக்குனர், அஜய் வாசுதேவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. கடந்த டிச-8ஆம் தேதி தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை வெறும் பத்தே நாட்களில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வாசுதேவ். ஆச்சர்யமான விஷயம் தான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!