
தங்கை திருமணத்தில் பழைய ஆடை அணிந்த ராம்சரண் மனைவி
இந்த விஷயத்தை பின்பற்றி வரும் சமந்தா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே ஆகிய பிரபலங்களின் பட்டியலில் தற்போது ராம்சரணின் மனைவி உபாசனாவும் சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களாக அவரது சகோதரியின் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்பது வருடங்களுக்கு முன் தனது திருமண நிகழ்வின்போது தான் அணிந்திருந்த லெஹங்கா உடை ஒன்றை, இப்போதைய டிரெண்டிங்கிற்கு மாற்றி வடிவமைத்து, அதை அணிந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், உபாசனா. பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணா இதை வடிவமைத்து கொடுத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!