
டிச., 24ல் ஓடிடியில் வெளியாகும் திலீப் படம்
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.. தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட துவங்கி இருந்தாலும் இந்தப்படத்தை தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர் தயக்கம் காட்டியுள்ளார்.
காரணம் திலீப் வயதான மனிதராக நடித்துள்ளதால், இந்தப்படத்தை தியேட்டருக்கு வந்து அதிக அளவிலான ரசிகர்கள் ரசிப்பார்களா என்கிற சந்தேகம் தயாரிப்பாளருக்கு எழுந்துள்ளதாம். அதனால் இந்தப்படத்தை நேரடியாக ஒடிடியிலேயே வெளியிட முடிவு செய்துள்ளார்கள். டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப்படத்தை வரும் டிச-24ஆம் தேதி வெளியிடுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!