
ஆபாச வார்த்தை விவகாரம் : சுருளி பட இயக்குனர் - நடிகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது படம் வெளியானபோதே சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சென்சார் போர்டு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தப்படம் எங்களால் தணிக்கை செய்யப்படவில்லை என சென்சார் போர்டு ஏற்கனவே கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!