
மலையாள படத்திற்காக கேரளாவில் விழா நடத்திய ஜான் ஆப்ரஹாம்
மலையாள சினிமா மீது கொண்ட தனி ஈடுபாடு காரணமாக இன்னும் ஒருபடி மேலே போய் தனது. ஜேஏ என்டர்டெய்ன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மலையாளத்தில் நேரடியாக ஒரு படம் தயாரிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார் ஜான் ஆப்ரஹாம். இந்தப்படத்திற்கு மைக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. கடந்த அக்டோபரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
நேற்று இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவை கேரளாவிலேயே நடத்திய ஜான் ஆப்ரஹாம் தானும் நேரிலேயே வந்து கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க, ரஞ்சித் சஜீவ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விஷ்ணு சிவபிரசாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!