
ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
ஆந்திர மாநில அரசு மக்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. தெலுங்கு ஹீரோக்கள் வெள்ள நிவாரண உதவிகளை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாவும் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்கள் சக்திகேற்ப நிவாரண தொகையை அறிவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகள் வழங்கிய ஹீரோக்கள் ஆந்திர மக்களின் நிலை கண்டு மனம் நெகிழ்வதாகவும் இந்த நேரத்தில் அரசுக்கு அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!