
பாலகிருஷ்ணாவுடன் இணைந்த ஸ்ருதிஹாசன் - படப்பிடிப்பு துவங்கியது
நவ 13, 2021
Advertisement
தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் படத்திற்கு பிறகு தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கன்னட கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த நிலையில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திலும் தற்போது அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரவிதேஜாவுடன் ஸ்ருதிஹாசன் நடித்த கிராக் என்ற படத்தை இயக்கிய கோபிசந்த் மாலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!