
கடுவா படப்பிடிப்பை மீண்டும் துவங்கிய பிரித்விராஜ்
அதையடுத்து பிரித்விராஜ் சில படங்களில் நடித்துவிட்டு, மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அதேபோல ஷாஜி கைலாஷும் மோகன்லாலை வைத்து குறுகிய நாட்களிலேயே அலோன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இதற்குள் கடுவா படத்திற்கு எழுந்த சில பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஒரு இளம் தோட்டக்காரனை பற்றிய கதையாக உருவாகும் இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றியாக கதையாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!