
சமந்தா - நாகசைதன்யாவை ஒருசேர ஒதுக்கிய மகா சமுத்திரம்
இதே தயாரிப்பு நிறுவனத்தில் முந்தைய படமான, 96 படத்தின் ரீமேக்கான ஜானுவில் சமந்தாவும் சர்வானந்தும் இணைந்து நடித்து இருந்தனர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை, அதனால் மகாசமுத்திரம் படத்திலும் சமந்தாவை நடிக்க வைக்கலாம் என நினைத்து இருந்தவர்கள் அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்தனர். அதேபோல சர்வானந்த் கதாபாத்திரத்தில் முதலில் நாகசைதன்யா நடிப்பதாக தான் இருந்தது அதன் பிறகு சில காரணங்களால் அவரம் ஒதுங்கிக் கொள்ள அதன் பிறகு ரவி தேஜா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அவரும் விலகி கொண்ட நிலையில் தான் சர்வானந்த் இந்த படத்திற்குள் வந்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!