
டைகர் நாகேஸ்வரா ராவ் படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு
செப் 19, 2023
Advertisement
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "டைகர் நாகேஸ்வரா ராவ்". அனுபம் கெர், ரேணு தேசாய், நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பிறகு தற்போது இதன் இரண்டாவது பாடல் தமிழில் (இவன்), தெலுங்கில் (வீடு) என பெயரில் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!