பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்
மே 23, 2022
Advertisement
கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற "தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை" பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!