சுதீப்பிற்கு புதிய பதவி
ஏப் 07, 2023
Advertisement
முன்னணி கன்னட நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் "விக்ராந்த் ரோணா, கப்ஜா" ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது "லக்கிமேன்" படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் அனுதாபியான கிச்சா சுதீப், வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கிச்சா சுதீப் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் புண்யகோடி தத்து யோஜனா (பசு தத்தெடுப்புத் ) திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். "பசுக்களை பராமரிக்கவும், கோசாலைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு வாய்ப்பாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் கிச்சா சுதீப்பை நாங்கள் தூதராக இணைத்துள்ளோம். சுதீப் புண்யகோட்டி தத்து யோஜனாவை மாநிலம் முழுவதும் பரப்ப உதவுவார்” என்று துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…