
நாகார்ஜூனா 99வது பட அப்டேட் வெளியானது
ஆக 29, 2023
Advertisement
தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர். வெற்றி, தோல்வி கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நாகார்ஜூனாவின் 99வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு "நா சாமி ரங்கா" என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகிறது. இன்று நாகார்ஜூனா பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!