
80 வயது ரசிகைக்கு மோகன்லால் இன்ப அதிர்ச்சி
செப் 23, 2021
Advertisement
கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி(வயது 80). மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் பேசி இருந்தார். இதுகுறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!