மம்முட்டி படத்தின் டப்பிங் பணியை துவங்கிய மஞ்சு வாரியர்
ஜன 13, 2021
Advertisement
மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வரும் "தி பிரைஸ்ட்" படம், அவரது திரையுலக பயணத்தில் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம் என்று சொல்லலாம். கடந்த 20 வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட மஞ்சு வாரியர், மம்முட்டி படத்தில் மட்டும் இதுநாள் வரை நடித்ததே இல்லை.. இதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள "தி பிரைஸ்ட்" என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.
திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்பே முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மஞ்சு வாரியர் மற்றும் இன்னொரு நாயகியான நிகிலா விமல் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை படமாக்கி முடித்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். மஞ்சு வாரியர் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!