16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால்
செப் 21, 2024
Advertisement
ஆரம்பகால கட்டங்களில் மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் இணைந்து நடித்தனர். முன்பு அதிராத்ரம் (1984), அனுபந்தம் (1985), வர்தா (1986), கரியில காட்டு போல (1986), அடிமகள் உடமகள் (1987), ஹரிகிருஷ்ணன்ஸ் (1998) உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். கடைசியாக 2008ம் ஆண்டு வெளியான "டுவென்ட்டி" படத்தில் இணைந்து நடித்தனர். சமீபத்தில் "மனோரதங்கள்" என்ற அந்தாலஜி படத்தில் நடித்தனர். ஆனால் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தனித்தனி கதையில் நடித்தனர்.
இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். டேக் ஆப், சியூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் 8வது படம் இது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…