
மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மரணம்!
ஜன 09, 2022
Advertisement
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு. இவர் 1980களில் தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் அல்லூரி சீதா ராம ராஜூ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து கிருஷ்ணாகாரி அப்பா, பஜாரு ரவுடி, கலியுக கிருஷ்ணுடு, கரும்புலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 1997க்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரமேஷ்பாபு, 2004ல் அர்ஜூன், அதிதி போன்ற தெலுங்கு படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் பாபு, நேற்று ஐதராபாத்தில் காலமானார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!