மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா
பிப் 26, 2021
Advertisement
சமீபத்தில் தெலுங்கில் அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், க்ரீத்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான "உப்பென்னா" படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் புஜ்ஜிபாபு இயக்கிய இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் தயாரித்திருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப்படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நடிகர் மகேஷ்பாபுவின் பாராட்டு இயக்குனர் சுகுமாரை ரொம்பவே நெகிழ வைத்துள்ளது.
காரணம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மகேஷ்பாபுவை வைத்து "1 நேனொக்கடினே" படத்தை இயக்கியிருந்தார் சுகுமார். அதன்பிறகு மகேஷ்பாபு மகரிஷி படத்தை முடித்ததும் மீண்டும் சுகுமார் டைரக்சனில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து தான், அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்கிற படத்தை இயக்கி வருகிறார் சுகுமார்.
அதனால் மகேஷ்பாபுவுக்கு சுகுமாருக்கும் மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தநிலையில் சுகுமார் தயாரிப்பில் உருவாகி உள்ள உப்பென்னா படத்தை மகேஷ்பாபு பாரட்டியதன் மூலம் அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு மகேஷ்பாபுவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சுகுமார். அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடைபெற்ற சுகுமார் மகளின் பூப்பனித நீராட்டு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் மகேஷ்பாபு. இதன்மூலம் அவர்களது நட்பில் விரிசல் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!