ஜே.சி டேனியல் விருது அறிவிப்பு : ஜோஜு ஜார்ஜ், துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகர், நடிகையாக தேர்வு
ஜூலை 22, 2022
Advertisement
மலையாள சினிமாவின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியல். இவர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 13வது ஜே.சி.டேனியல் அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிஷாந்த் ஆர் கே இயக்கிய "அவச வ்யூஹம்" சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை "மதுரம்" படத்திற்காக அகமது கபீர் பெறுகிறார். மதுரம், நயத்து, பிரீடம் பைட் ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். "உடல்" படத்தில் நடித்ததற்காக துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் "மேப்படியான்" படத்தில் நடித்ததற்காக சிறப்பு நடுவர் குழுவின் விருதை பெறுகிறார். ஹோலி பாதர் படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் அறிமுக இயக்குனருக்கான விருதை பெறுகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!