நண்பர்கள் இருவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு ; துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு
ஜூலை 29, 2021
Advertisement
பொதுவாகவே பிரபல ஹீரோக்களின் பிறந்த நாட்களில் அவர்களது படங்கள் குறித்த டீசர், டிரைலர் அல்லது புதிய பட அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாளும் இதே ரீதியில் சில புதிய அறிவிப்புகளோடு அமர்க்களமாக முடிந்திருக்கிறது. குறிப்பாக தனது அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை தனது இரண்டு நண்பர்களுக்கே கொடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் துல்கர் சல்மான்.
அதில் ஒருவர் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான சௌபின் சாஹிர். பிரேமம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான இவர், துல்கருடன் தொடர்ந்து இதுவரை 6 படங்களில் நண்பராக நடித்தவர்.. அதனாலாயே, இவரை "பறவ" படம் மூலம் இயக்குனராக்கி, தானே படத்தை தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார் துல்கர் சல்மான். இப்போது இரண்டாவது முறையாக படம் இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்துள்ளார். படத்தின் பெயர் "ஓதிரம் கடகம்" இதுவரை தான் நடித்திராத கதாபாத்திரமும் கதையும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டாராம் துல்கர்.
அடுத்ததாக "கிங் ஆப் கொத்த". மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷியை இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் துல்கர். இயக்குனர் ஜோஷி துல்கரின் தந்தையான மம்முட்டியை வைத்து சுமார் 50 படங்கள் வரை இயக்கியவர். அந்தவகையில் சிறுவயது முதலே நண்பனாக பழகிய அவரது மகனை இப்போது இயக்குனராக்கியுள்ளார் துல்கர் சல்மான்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!