ஆட்டோ ஓட்டும் ஆஷா சரத்
மே 10, 2021
Advertisement
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில் வெளியான "த்ரிஷ்யம்-2விலும் நடித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, "பீஸ்" என்கிற படத்தில் தன்னெழுச்சியாக உயர்ந்த தொழிலதிபராக நடித்து வருகிறார் ஆஷா சரத். "வீட்டிலே ஊனு" என்கிற பெயரில் சிறிய அளவில் உணவகம் ஆரம்பித்து, அதை தானே, ஆட்டோவில் ஏற்றி பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முன்னேறுபவராக நடித்துள்ளார் ஆஷா சரத்.. இதற்காக ஆட்டோ ஒட்டி பழகிய ஆஷா சரத், படப்பிடிப்பின்போது எவ்வித பயமும் இன்றி ஆட்டோ ஒட்டியதை பார்த்து படக்குழுவினரே வியந்து போனார்களாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…