பசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ? : உறுதிப்படுத்திய மலையாள காமெடி நடிகர்
ஆக 01, 2026
தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் "புஷ்பா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அட்லி இயக்கத்தில் "ராக்கா" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என ஒரு பக்கம் சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம் மலையாள இயக்குனரும், நடிகருமான பசில் ஜோசப் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் திருமணத்தில் பசில் ஜோசப் கலந்து கொண்டதும், அல்லு அர்ஜுனுடன் நெருக்கம் காட்டியதும் இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மைதான் என நினைக்க வைத்தது. இந்த நிலையில் இந்த வாரம் மலையாளத்தில் "புளூட்டோ" என்கிற படம் வெளியாகி உள்ளது. இதில் நடித்துள்ள மலையாள காமெடி நடிகர் நீரஜ் மாதவ், பசில் ஜோசப் - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றிய ஒரு புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
புளூட்டோ படத்தில் நீரஜ் மாதவுடன் இயக்குனரும், நடிகருமான அல்தாப் சலீம் ஒரு வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் பசில் ஜோசப் தான் நடிக்க இருந்தார் என்றும், அவர் அல்லு அர்ஜுன் படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருந்ததால் அவருக்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார் நீரஜ் மாதவ். அதன் பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் அல்தாப் சலீமை நடிக்க வைத்ததாகக் கூறியுள்ளார். இதன் மூலம் அல்லு அர்ஜுனை பசில் ஜோசப் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் தான் என்பது தெளிவாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!