மீண்டும் சூர்யா உடன் எப்போது படம் : ஜோதிகா பதில்
அக் 11, 2021
Advertisement
ஜோதிகாவின் 50வது படமாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.,14ல் ஓடிடியில் வெளிவருகிறது ‛உடன்பிறப்பே" படம். கிராமத்து கதையில் அண்ணன் - தங்கை உறவை மையமாக வைத்து இந்தபடம் உருவாகி உள்ளது. அண்ணனனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தயாரித்துள்ளார்.
ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டி : இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன். நிறைய ஆய்வு செய்து, பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என்றார்.
ஓடிடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛எனது 50வது படம் தியேட்டர்களில் வெளியிடாதது வருத்தம் தான். இருப்பினும் இது முன்பே திட்டமிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கும், சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் ஓடிடி முடிவை எடுத்தோம்"" என்றார்.
சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛நல்ல கதைக்காக இருவருமே காத்திருக்கிறோம். அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைந்து நடிப்போம்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!