
கருப்பு சேலையில் கவர்ச்சி படம் வெளியிட்ட அமலா பால்
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், குடி யெடமைதே என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் படவாய்ப்பை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பிரன்ட்டான கருப்பு நிற புடவையில் கிளாமர் புகைப்படங்களை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!