12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரகாஷ்ராஜ்
அக் 07, 2021
Advertisement
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்தப்படம் முடிந்ததும் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை சமீபத்தில் பிரகாஷ்ராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்..
கில்லி படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்த இவர்களது ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.. தொடர்ந்து சிவகாசி, போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் இணைந்து நடித்த இவர்கள் அதன்பிறகு இணைந்து நடிக்கவே இல்லை. அந்தவகையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!