
மொத்த பேருமே எனக்கு எதிராக இருந்தனர் - ராம்
சருமப்பிரச்னையும் உருவானதால், போட்டியில் பங்கேற்பது கடினமாகிவிட்டது. நான் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கு உதவுமே என்று தான் ‛சர்வைவர்" நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி வெற்றி பெற முடியாது என நன்றாக தெரியும். குறும்படம் ஒன்றை இதிலும் போட்டிருந்தால் என் பக்கம் இருந்த நியாயம் வெளிப்பட்டிருக்கும். என் ரசிகர்களே பலர் குறும்படம் வெளியிட்டு விட்டனர். மொத்த பேருமே எனக்கு எதிராக தான் இருந்தனர். போட்டியாளர்கள் எனக்கு எதிராக சின்ன விஷயத்தை, ஊதி பெரிதாக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியே அடுத்தவர்களை காலி செய்வது தான். ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்த வரையில் எனக்கு இந்த சர்வைவர் நல்ல அனுபவமே. இவ்வாறு அவர் கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!