
அதிகம் தெரியாத போட்டியாளர்கள் : பரபரப்பை ஏற்படுத்துமா பிக் பாஸ் 5 ?
இசைவாணி, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா, பவனி, நடியா சங், வருண், ஸ்ருதி, அக்ஷரா, ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகியோரை ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்கும். பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இவர்கள் யார் என்பது அதிகம் தெரியாமல் இருந்தாலும், அங்கு சர்ச்சை, சண்டை ஆகியவற்றில் சிக்குபவர்களுக்கு அதிகமான பிரபலம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று தான் முதல் நாள் நிகழ்ச்சி என்பதால் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் நாடகம் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறும். அப்படி இந்த சீசனில் யார் காதலில் விழப் போகிறார்களோ ?
போட்டியாளர்களுக்குள் சில பல மோதல், அரசியல் நிகழ்ந்து, ஒரு சில அணிகள் உருவாகும். அவர்களுக்குள் காரசாரமான விவாதங்கள் நடக்கும். முதல் நாளிலேயே இந்த நிகழ்ச்சியைப் பிரபலமாக்குவதற்கென்றே சமூக வலைத்தளங்களில் சிலர் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
வழக்கம் போல ஒரு "டெம்ப்ளேட்டுக்குள்" அடங்கும் விதத்தில்தான் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விஜய் டிவி தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள், மாடலிங், வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், பாடகர்கள் என இந்த சீசனிலும் எந்த மாற்றமும் இல்லை.
வீட்டில் மட்டுமே சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான லோகோவை மாற்றியுள்ளார்கள். ஐந்தாவது சீசனாக அதே தொகுப்பாளர் கமல்ஹாசன். அவரும் வழக்கம் போலவே எந்த மாற்றமும் இல்லாமல் தனது தொகுப்பு வேலையை ஆரம்பித்துள்ளார்.
முந்தைய நான்கு சீசன்களைப் போல "மோனோபாலி"யாக இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். இந்த 5வது சீசன் முந்தைய சீசன்களிலிருந்து மாறுபட்டிருந்தால் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும். அது நடக்குமா, முந்தைய சீசன்களைப் போல பரபரப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!