
நீண்ட ஹேர் ஸ்டைலுக்கு விடை கொடுத்த பொன்னியின் செல்வன் நடிகர்கள்
முத்தையா இயக்கத்தில் "விருமன்" படத்தில் வேறு தோற்றத்தில் நடிக்க கார்த்தி போய்விட்டார். ஜெயம் ரவி "ஜனகன மண" படத்திலும், மற்றுமொரு புதிய படத்திலும் நடிக்கத் தயாராகிவிட்டார். அது போலவே மற்றவர்களும் அவரவர் நடிக்கும் புதிய படங்களின் கதாபாத்திரத்திற்கேற்ப ஹேர் ஸ்டைலை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
"பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் 2022 கோடை விடுமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப்பிறகு சில மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வரலாம்.
"பொன்னியின் செல்வன்" படத்திற்காக இதுவரை எந்த ஒரு கதாபாத்திர அறிமுக போஸ்டரும் வெளியாகவில்லை. அவற்றிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!