
ஷங்கரை தொடர்ந்து மகளை அறிமுகம் செய்யும் ராஜீவ் மேனன்
டைரக்டர் ஷங்கரும் தனது மகள் அதிதியை, விருமன் படத்தில் அறிமுகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பிரபல ஒளிப்பதிவாளரும், மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் என பல படங்களை இயக்கிய ராஜீவ்மேனனும் தனது மகள் சரஸ்வதியை தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகம் செய்கிறார். சரஸ்வதி இதற்கு முன்பு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளம் மயம் என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!