
நீண்ட இடைவெளிக்கு பின் இந்த வாரம் அதிகப் படங்கள் ரிலீஸ்
ஆனால், நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி ""பிளான் பண்ணி பண்ணனும், சூ மந்திரக்காளி, பேய் மாமா, வீராபுரம், சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, சிண்ட்ரல்லா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் ஏற்படலாம்.
இருப்பினும், இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், மக்கள் தான் தியேட்டர்கள் பக்கம் இன்னும் அதிகமாக வரத் தயங்குகிறார்கள்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பெரிய படங்கள் வர உள்ளதால் அப்போது தியேட்டர்கள் கிடைக்க பிரச்சினையாக இருக்கும். அதனால், இந்த வாரம் இத்தனை படங்கள் வெளிவருதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!