
வலிமை வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு?
ஆயுத பூஜைக்கு வருமா, தீபாவளிக்கு வருமா என பட வெளியீடு பற்றியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக "வலிமை" பற்றிய அப்டேட் நாளை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி படத்தின் டீசர் பட வெளியீட்டுத் தேதியுடன் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான முதல் சிங்கிள் கூட எந்த அறிவிப்பும் இல்லாமல்தான் வெளியானது. அது போலவேதான் டீசரும் வெளியாகும் எனத் தெரிகிறது.
"அண்ணாத்த, மாநாடு" ஆகியவற்றுடன் தீபாவளி போட்டியில் "வலிமை" களமிறங்குமா அல்லது "எனிமி, அரண்மனை 3" ஆகியவற்றுடன் ஆயுத பூஜை போட்டியில் களமிறங்குமா அல்லது "வலிமை"யுடன் தனியாக களமிறங்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!