
டில்லியில் சந்திப்பார்களா விஜய் - அஜித்?
ஓய்வு நேரத்தில் டில்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யை அஜித் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டில்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அஜித், விஜய் ஒரே சமயத்தில் டில்லியில் இருப்பதால் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!