
இலங்கை பிரச்னை கொண்ட கதைகளில் நடிக்க மாட்டேன் : லாஸ்லியா
இந்த நிலையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!