
நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்
கொரானோ கால கட்டத்தில் தனி விமானத்தில் பறந்து சென்று தங்களைப் பற்றி பேச வைத்தனர். சில தினங்களுக்கு முன்பு நயன்தராவின் அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது இந்த காதல் ஜோடி. இன்று(செப்., 18) இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். அதற்காக பெரிய கேக் ஒன்றை வைத்து காதல் ஜோடி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இருவரும் கட்டிபிடித்தபடியான சில புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நன்றி தங்கமே, இந்த அற்புதமான பிறந்தநாளை ஆச்சரியமாக்கியதற்கு...என்னுடைய வாழ்வில் நீ இருப்பதற்கு ஈடிணையில்லாத பரிசு வேறு எதுவுமில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் "டூ டூ டூ" பாடல் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!