
இன்ஸ்டாகிராம் சாதனையை கொண்டாடிய மேகா ஆகாஷ்
இவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷ் வரவேற்பை பெற்றார். இதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று புதிய சாதனை ஒன்றை பெற்றுள்ளார். இதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடற்கரை மணலில் கோலம் போன்று வரைந்து 3 மில்லியன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!