
வாராவாரம் ஓடிடியில் படங்கள் : தியேட்டர்கள் கலக்கம்
ஓடிடியில் புதிய படங்கள் நேரடி வெளியீடு என்பது தான் அந்த புதிய பாதை. ஓடிடியில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சில பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியானது, தியேட்டர்காரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும்.
இப்போது வாராவாரம் ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகி தியேட்டர்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் வெளியான "தலைவி, லாபம்" ஆகிய படங்கள் வசூலைத் தரவில்லை. பல ஊர்களில் அப்படங்கள் இன்றே கடைசி என்கிறார்கள். அடுத்து நாளை "கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்" ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இப்படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது நாளைதான் தெரிய வரும்.
இதனிடையே, ஓடிடி தளங்களில் வாராவாரம் படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் "டிக்கிலோனா" ஓடிடியிலும், "துக்ளக் தர்பார்" முதலில் டிவி, மறுநாள் ஓடிடியிலும் வெளியாகியது. நாளை "அனபெல் சேதுபதி" படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் செப்டம்பர் 24ம் தேதி "இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்" ஓடிடியில் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓடிடியில் படங்கள் வருவது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!