
ரகுல் பிரீத் சிங்கின் சர்ச்சைக்குரிய படம் கைவிடப்பட்டது?
இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் மறுத்தபோதிலும் ரகுல் பிரீத் சிங் துணிச்சலாக நடிக்க சம்மதித்தார். இந்தபடத்தின் கதைப்படி ஒரு பிரபல நிறுவனம் காண்டம்களை தயாரித்து அதை இளம் பெண்களிடம் கொடுத்து பரிசோதனை செய்வது போன்று இருந்தது. இப்படியொரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் நடிக்கத்தான் ஓகே சொல்லியிருந்தார் ரகுல். ஆனால் இப்போது இந்த படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயம் படம் வெளியாகும் சமயத்தில் பிரச்னைகள் எழும் என்பதால் தேவையில்லாத வீண் சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என எண்ணி இப்போதே படத்தை எடுக்க வேண்டாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை தயாரிப்பதற்கு காண்டம் நிறுவனங்களே எதிர்ப்பு தெரிவித்து விட்டன. அதனால் அந்த படத்தை தயாரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!