
கட்-அவுட்டிற்கு ரத்த அபிஷேகம் - ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்
இது தொடர்பாக நடிகர் ரஜினியோ தனது ரசிகர்களை கண்டிக்கவில்லை. இதனாலயே அவர் கண்டிக்காததை சுட்டிக்காட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரசிகர்களை தடுக்க வலியுறுத்தி அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!