
சமந்தாவின் வாழ்த்தும், நாக சைதன்யாவின் நன்றியும்...
இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள "லவ் ஸ்டோரி" படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நாகசைதன்யா டுவிட்டரில் பகிர்ந்த அந்தப் பதிவை ரிடுவீட் செய்து, படத்தின் நாயகி சாய் பல்லவியை மட்டும் "டேக்" செய்து, "வின்னர், குழுவினருக்கு நன்றி" என சமந்தா வாழ்த்தியிருந்தார். அதில் கூட அவர் நாகசைதன்யாவை ஏன் "டேக்" செய்யவில்லை, அவருக்கென தனியாக ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற சந்தேகமும் கிளம்பியது.
சமந்தா நேற்று மாலை பதிவிட்ட அந்த வாழ்த்திற்கு நாக சைதன்யாவும் உடனடியாக பதில் தெரிவிக்கவில்லை. எனவே, வழக்கம் போல விவாகரத்து கிசுகிசு இறக்கை முளைத்து பறந்தது. இந்நிலையில் இன்று காலை சமந்தாவிற்கு நன்றி தெரிவித்து "நன்றி சாம்" என பதிலளித்துள்ளார் நாக சைதன்யா. ஆனால், அந்த பதிலுக்கும் பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி கேள்வி கேட்டு வருகின்றனர்.
சமந்தா - நாக சைதன்யா இருவரும் வெளிப்படையாக இது பற்றி அறிவிக்கும் வரை "விவாகரத்து கிசுகிசு" வந்து கொண்டுதான் இருக்கும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!