
மூன்று நட்சத்திரங்கள் வெளியிட்ட பார்டர் டிரைலர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 06:09 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரை நடிகர்கள் சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.
<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/Cy8iSKDNfUg" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!