
விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த வி.ஜே மகேஸ்வரி
இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்த அனுபவத்தையும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பற்றி மகேஸ்வரி கூறும்போது, ‛‛கமல் சார் அலுவலகத்திலிருந்து என்னை நடிப்பதற்காக அழைத்தபோது யாரோ சும்மா விளையாடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் நேரில் சென்ற போதுதான் அது நிஜம் என்பதை தெரிந்து கொண்டேன், எந்த ஆடிசனும் வைக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை கூட படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் தெரிந்து கொண்டேன். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் விஜய் சேதுபதியுடன் தான் உள்ளது, படப்பிடிப்பில் அவர் எனக்கு நிறைய உதவினார். ஒரு நடிப்பு பள்ளியில் புதிதாக சேர்ந்தது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது"" என்று கூறியுள்ளார் மகேஸ்வரி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!