பொன்னியின் செல்வனை தொடர்ந்து தனுஷ் படத்தின் காட்சிகள் கசிந்தன
செப் 07, 2021
Advertisement
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த "மாறன்" படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் "திருச்சிற்றம்பலம்" படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து, வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து நடன காட்சிகள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது தனுஷ் படத்தின் காட்சிகளும் கசிந்திருப்பதால் திரைத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!