
மீண்டும் கார்த்தி - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி
கார்த்தி அறிமுகமான "பருத்தி வீரன்" படத்தில் யுவனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தில் பெரிதும் பேசப்பட்டன. கார்த்தி, யுவன் கூட்டணி கடைசியாக 2013ல் வெளிவந்த "பிரியாணி" படத்தில் இடம் பெற்றது.
இந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த "சுல்தான்" படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். அப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்தார்கள். இருந்தாலும் ஒரு படத்தின் இசை பற்றி குறிப்பிடும் போது பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
அந்த விதத்தில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இன்று ஆரம்பமான "விருமன்" படத்தில் கார்த்தி, யுவன் கூட்டணி மீண்டும் முழுமையாக இணைகிறது. இப்படத்தை இயக்கும் முத்தையாவுடன் முதல் முறையாக இணைகிறார் யுவன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!