
சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி - முத்தையா கூட்டணி
இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. படத்திற்கு “விருமன்” என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். "மாநகரம்" மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். இப்படத்தின் பூஜை திங்கள்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு துவங்குகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!